×

‘அல்பினோ’ பெங்குயின்

நன்றி குங்குமம் முத்தாரம்

போலந்தின் பால்டிக் போர்ட்டில் உள்ள ஓர் உயிரியல் பூங்காதான் இப்போது ஹாட் டாக்.  அந்த உயிரியல் பூங்காவில் பத்திர மாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ‘அல்பினோ’ பெங்குயின் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு வந்தி ருக்கிறது. ‘அல்பினோ’ தோல் நிற குறைபாட்டுடன் கடந்த டிசம்பர் 14-ம் தேதி இந்தப் பெங்குயின் பிறந்தது.

அதனால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. இவ்வகையான பெங்குயின்கள் அரிதிலும் அரிதானது. ‘‘இந்த உலகத்திலேயே வெள்ளை நிற  பெங்குயின் இது மட்டும்தான்...’’ என்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள். சுறுசுறுப்பாக விளையாடிக்  கொண்டிருக்கும் இந்த பெங்குயின்கொஞ்ச நாட்களுக்குத் தான் உயிரோடு  இருக்கும்என்ற தகவல் பலரை நிலைகுலைய வைத்துள்ளது.



Tags : Penguin ,Albino , Albino ,penguin
× RELATED அமெரிக்காவில் சர்வதேச பதிப்பக சிஇஓவான இந்திய வம்சாவளி